செய்திகள்

புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது: யாழில் அநுரகுமார

புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்பு காட்டவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனவாத அடிப்படையில் செயற்பட்டு வரும் தரப்பினருக்கு மீளவும் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
-06