கே.பி.யை கைது செய்ய இன்டர்போல் அழுத்தம் கொடுக்காது: இலங்கை அரசே முடிவெடுக்க வேண்டும்
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு இன்டர்போல் அழுத்தம் கொடுக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்போலின் ஊடகப் பிரிவு இதனை உறுதி செய்துள்ளது.
சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ள எந்தவொரு நபரையும் கைது செய்யுமாறு நாடுகள் மீது இன்டர்போல் அழுத்தம் கொடுக்காது எனவும் குமரன் பத்மநாதனை கைது செய்வதா இல்லையா என்பதனை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் ஓர் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பயங்கரவாத சட்டத்தின் அடிப்படையில் குமரன் பத்மநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-06




