செய்திகள்
பொலிஸ் நிலையங்களில் CVTV கமராக்களை பொறுத்த நடவடிக்கை
நாடு பூராகவும் பொலிஸ் நிலையங்களிலுள்ள சிறைக் கூடங்களுக்கு அருகில் சீ.சீ.ரி.வி கமராக்களை பொறுத்துவதற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைகளில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. -(3)




