செய்திகள்

விசஊசி தொடர்பில் மருத்துவ பரிசோதனை செய்தோர் தொகை 95 ஆக அதிகரிப்பு

விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் மூன்றாம் வாரத்தில் 22 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.

விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், இரண்டாம் வாரம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், மூன்றாம் வாரம் 15ஆம், 16 ஆம் திகதியும் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் வடமாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்றன. அதில் யாழ் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 பேரும், வவுனியா மாவட்டத்தில் 06 பேரும், மன்னார் மாவட்டத்தில் 04 பேருமாக 95 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 2 ஆம் திகதி 26 பேரும், 9 ஆம் திகதி 47 பேரும், 15 ஆம் 16 ஆம் திகதிகளில் 22 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை, எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

N5