செய்திகள்

சிகா வைரஸை கட்டுப்படுத்த 27 முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

சிகா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் எதிர்வரும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை நாட்டில் நுளம்பு ஒழிப்பு வாரத்தை அமுல் படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய சுகாதார பணிப்பாளர் பாலித மகிபாலவே இதனை தெரிவித்துள்ளார்.
ஈடீஸ் எனும் நுளம்பு மூலமே இந்த வைரஸ் பரவும் நிலையில் அது தற்போது தெற்காசிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகின்றது. அதனை இலங்கைக்குள் பரவுவதை தடுக்க வேண்டுமாயின் நாட்டில் நுளம்பு பெருக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இதன்படியே இந்த வாரம் அமுல் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)