செய்திகள்

அரசியலில் ஈடுபடும் திட்டம் எதுவும் எனக்கில்லை: மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண

அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை எனவும்  தமக்கு எவ்வித அரசியல் கட்சியும் கிடையாது எனவும் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சில நபர்களுக்கு தாம் மரியாதை அளித்து வருவதாகவும் எனினும் தாம் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தாம் வெளியிட்ட நூலின் ஊடாக யுத்த இரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
-06