சிகரட் வரியை அதிகரிக்க நிதி அமைச்சிலிடமிருந்து இடையூறு
புகையிலை பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவாதக தமக்கு தகவல் தெரிய வந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவையில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதும் நிதி அமைச்சிடமிருந்து இது வரை பதில்கள் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த வரியை அதிகரிப்பதற்கு சில தடைகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3)




