செய்திகள்
வடக்கு , கிழக்கில் பிரிவினை வாதத்திற்கு அரசாங்கம் உதவுகிறது : வீரவன்ச குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் பிரிவினை வாதத்தை பலப்படுத்தும் நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாகவும் இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வரும் 24ஆம் திகதி எழுக தமிழ் என்ற நிகழ்வானது பொங்கு தமிழ் நிகழ்வின் மறு வடிவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நவம்பரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு இடமளிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




