இணையத்தில் கசிந்த கணவருடன் நெருக்கமான பிரபல நடிகையின் படங்கள்
நடிகை சோனு கவுடா தமிழில் ஆண்மை தவறேல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் 144, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக முன்னாள் எம்.எல்.ஏ மகனுடன் சோனு கௌடா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என்ற பெயரில் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.
இந்த புகைப்படங்களை பார்த்த நடிகை சோனு கௌடா அதிர்ச்சியடைந்தார். கணவர் மனோஜூடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தான் இப்படி தவறான தகவல்களுடன் இணையத்தில் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ள சோனு கவுடா, புகைப்படங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
N5




