செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு 27,603 பேர் அனுமதி

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு கடந்த முறையை விட 10 வீதமான மாணவர்கள் அதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்பபடி இம்முறை 27,603 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வருடத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவில் மட்டுமே பதிவு செய்ய முடியுமெனவும் அதனை இணையத்தளத்தினூடாக மட்டுமே செய்ய முடியுமெனவும் மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு தடவை பதிவு செய்தால் அதனை இரத்துச் செய்ய முடியாது எனவும் இரத்துச் செய்த பின்னர் மீண்டும் எக்காரணம் கொண்டும் பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் இணைத்துக்கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)