செய்திகள்

மஹிந்த தலைமையிலான புதிய கட்சி : ஒக்டோபர் 8 இல் ஆரம்பம்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான புதிய கட்சி எதிர்­வரும் 8 ஆம் திகதி சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக ஆரம்­பிக்­க­ப்ப­ட­வுள்­ளது. அக்­கட்­சிக்கு ‘ஐக்­கிய மக்கள் முன்­னணி’ என பெய­ரி­டப்­ப­ட­வுள்­ள­துடன் தாமரை மலர் சின்­ன­மாக அமை­ய­வுள்­ள­தாக அக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது.

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்­துள்ள ‘போராட்டத்­திற்கு உயி­ரூட்டும் புதிய மக்கள் பேரணி’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான பேரணி எதிர்­வரும் எட்டாம் திகதி எக­லி­ய­கொ­டவில் நடை­பெ­ற­வுள்­ளது. அதில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறு­ப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்­சி ­மன்ற பிர­தி­நி­திகள் உட்­பட ஏரா­ள­மானோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

அதன்­போதே புதிய கட்­சிக்­கான சம்­பி­ர­தா­ய­பூர்வ அறி­வித்தல் விடுக்­கப்­ப­ட­வுள்­ளது. மேலும் புதிய கட்­சியின் கொள்­கைகள், வேலைத்­திட்­டங்கள் அடங்­கிய கட்சிப் பிர­க­ட­னமும் அதன்­போது வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. புதிய கட்­சியில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லுள்ள உறுப்­பி­னர்கள் உள்­ள­டங்­க­லாக ஏனைய சில அமைப்­பு­களும் இணை­ய­வுள்­ள­தாகக் தெரி­ய­வ­ரு­கி­றது.

இதே­வேளை அக்கட்சியில் சகல இனக்குழுமங்களையும் அடையாளப்படுத்தும் வகையில் பிரத்தியேகக் குழுக்கள் அமைத்து செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிய வருகிறது.