செய்திகள்
ஜப்பானியிலிருந்து 30 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்
ஜப்பானில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் அந்த நாட்டிலிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
விசேட விமானமொன்றின் மூலம் அவர்கள் அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலுக்காக சென்று வீசாக் காலம் முடிவடைந்து தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை இவர்களுடன் 67 ஜப்பான் நாட்டு பாதுகாப்பு பிரிவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




