ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் நீக்கப்படும் வாய்ப்பு
விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம் ஆகியவற்றை பயங்கரவாத பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் நீக்கவேண்டி வரலாம் என்று அரோப்பிய நீதிமன்றத்தின் உயர் ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறியிருந்தது. எனினும் அரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகள் இதற்கு எதிராக முறையீடு செய்திருந்தன. ஆனால் இந்த முறையீட்டை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தின் உயர் ஆலோசகர் பரிந்துரைத்திருக்கின்றார். இதற்கு எதிராக மேன் முறையீடு செய்ய முடியும் என்ற போதிலும் ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் ஆலோசகரின் தீர்ப்பை மேவி ஒரு தீர்ப்பு வருவதற்க்கான வாய்ப்பு மிகவும் அரிது என்றும் அதனால் விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஆகியவை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு உருவாக்கி இருக்கிறது என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் 2001 செப்ரெம்பரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பல போராட்ட இயக்கங்களை பயங்கரவாத பட்டியலில் இணைத்த ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளையும் இந்த பட்டியலில் சேர்த்திருந்தது.




