செய்திகள்

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி

தோட்ட தொழிலார்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றைய தினமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
9ஆவது தடவையாக நேற்று கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் முதலாளிமார்கள் சம்மேளனத்திற்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் அதில் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த வாரத்திற்குள் கூட்டு ஒப்பந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென இ.தொ.க கூறிய போதும் அது நடக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)