செய்திகள்

லசந்த கொலை வழக்கின் விசாரணை அறிக்கைகளை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவு

‘சன்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் அனைத்தும் கல்கிசை நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தின் பாதுகாப்பில் அவற்றை வைக்குமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

லசந்தவின் கொலை வழக்கு முக்கியமான ஒன்றாக இருப்பதால், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் கோவைகளை தன்னுடைய பாதுகாப்பில் வைக்குமாறு விசாரணைகளை முனனெடுத்துவரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.

“தவறானவர்களின் கைகளுக்குள் இந்த விசாரணை அறிக்கைகள் சென்றடைவதைத் தடுப்பதற்கு இவ்வாறு நீதிமன்றப் பாதுகாப்பில் அவற்றை ஒப்படைப்பது சிறந்த வழி” என பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார். புதிய அரசாஙகம் பதவிக்கு வந்தபின்னர் லசந்த கொலை தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-06