செய்திகள்

பாகுபலியுடன் மோதவுள்ள முருகதாஸ்?

ராஜமௌலி இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான பாகுபலி முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகேஷ் பாபு நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கிவரும் படமும் இதே தேதியில் வெளிவரும் என கூறப்படுகிறது.

மகேஷ் பாபுவின் சூப்பர்ஹிட் படமான போக்கிரி வெளியாகி, ஏப்ரல் 28, 2017வுடன் 10 வருடம் நிறைவடைகிறது. அதை கொண்டாடும் விதமாக மகேஷ் பாபுவின் இந்த புதிய படம் வெளியாவதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

N5