செய்திகள்

”விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டும்” : கம்மன்பில

அண்மையில் யாழ்பாணத்தில் நடத்தப்பட்ட ”எழுக தமிழ்” நிகழ்வு தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென பிவித்துறு ஹெலஉறுமய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சர் அந்த நிகழ்வுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாகவும் இதனை அடிப்படையாக கொண்டு அவரை கைது செய்ய வேண்டுமெனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எப்.சீ.ஐ.டி கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)