1997இல் இருவர் காணால் போனமை தொடர்பாக 5 இராணுவத்தினருக்கு விளக்க மறியல்
1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்பாணத்தில் இரண்டு பேர் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 இராணுவத்தினர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவ லெப்டினன் கேர்ணல் ஒருவர் அடங்கலாக 5 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் இதற்கு முன்னரும் விளக்க மறியலிலிருந்து பிணையில் விடுதலையாகியிருந்த நிலையிலேயே மீண்டும் அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இது தொடர்பாக மேலும்9 இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)




