செய்திகள்

விக்கினேஸ்வரனின் கருத்து மீண்டும் குண்டுகள் வெடிக்கும் நிலைமைக்கு செல்லும் : வீரவன்ச

பஸ்களிலும் , ரயில்களிலும் குண்டுகள் வெடிக்கும் காலம் மீண்டும் வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விக்கினேஸ்வரன் சிங்களவர்களை தமிழ் மக்கள் மீண்டும் குரோத பார்வையில் பார்க்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பும் அதற்கு இடமளிக்கின்றது. என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார். -(3)