விச ஊசி தொடர்பாக நீதியான மருத்துவப் பரிசோதனையை பெற….
மருத்துவர் சி. யமுனாநந்தா
சட்ட மருத்துவப்படி ஒரு நபரைப் பரிசோதிப்பதற்கு, அந்நபரது அனுமதி பெற வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் உள்ளபோது தமிழீழ விடுதலைப் புலிகளை மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்கள் மீது தவறான அணுகுமுறையைக் கைது செய்தவர்கள் மேற்கொண்டனர் என மருத்துவர்கள் கூறுவாராயின், அம் மருத்துவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படலாம்.
மேலும் போராளிகளும் மீளவும் கைது செய்யப்படலாம். எனவே விச ஊசி தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்கு முன் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும். மேலும் விசேட நிபுணத்துவ மருத்துவ வசதிகளும், ஆலோசனைகளும் இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் எங்கு தமது மருத்துவ ஆலோசனையினைப் பெறவேண்டும் எனத் தெரிவுசெய்ய பூரண உரிமை உடையவர்கள். இவர்கள் சுயாதீனமாக இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா என்பனவும் நீக்க வேண்டும்.
உலகின் 2ம் உலக யுத்தத்தின் பின் நிகழ்ந்த பாரிய இனப்படுகொலைகள்
ஈழத் தமிழர் பிரச்சினைகள்






