தோட்டத் தொழிலாளர்கள் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பித்தனர் : மலையக அரசியல்வாதிகளை காணவில்லை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தொழில் உரிமைகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் கொழும்பில் தொழில் திணைக்களத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இவர்கள் மூன்று நாட்களுக்கு அந்தப் பகுதியில் தங்கியிருந்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே அந்த போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் இன்று மாலை தொழில் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்து போராட்டத்தை கைவிடுமாறும் எதிர்வரும் 5ஆம் திகதி பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும் இதன்போது தீர்வுகள் தொடர்பாக ஆராயப்படுமெனவும் அவர்கள் வழங்கிய உறுதி மொழிகளையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை முதல் இந்தப் போராட்டம் கடும் வெயிலுக்கு மத்தியிலேயே நடத்தபட்டது. ஆனால் எந்தவொரு மலையக அமைச்சர்களோ , பாராளுமன்ற உறுப்பினர்களோ அந்த இடத்திற்கு வந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
-(3)




