செய்திகள்
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை : ஊடகங்களே அதிகமாக காட்டுகின்றன என்கிறார் பொலிஸ் மா அதிபர்
இலங்கையில் குற்றச் செயல்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த கால புள்ளி விபரங்களுடன் தற்போதைய காலத்தை ஒப்பிட்டு பார்த்தால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதை அவதானிக்க முடியவில்லை. ஊடகங்கள்தான் சில விடயங்களை பெரிதாக காட்டுகின்றன. என அவர் தெரிவித்தள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




