செய்திகள்

தமன்னாவின் வதந்திக்கு முற்று புள்ளி?

நடிகைகள் என்றாலே சில சர்ச்சைகள் எழும். அந்த வகையில் தமன்னா சில நாட்களுக்கு முன் அவர் சிறிய பட்ஜெட் படங்களுக்கு எல்லாம் ப்ரோமோஷன் செய்ய வரமாட்டார் என கூறப்பட்டது.

மேலும், தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷும் இவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்ததாக கூறினார்கள்.

ஆனால், இதை தற்போது சுரேஷ் முற்றிலுமாக மறுத்துள்ளார், தமன்னா அந்த சமயத்தில் பாகுபலி-2 படப்பிடிப்பில் இருந்தார், அதனால், தான் அவரால் பங்கேற்க முடியாமல் போனது, மற்றப்படி நான் அவர் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

N5