செய்திகள்
பொலிஸார் மீது கைக்குண்டை வீசி சந்தேக நபர் தப்பியொட்டம்
அத்துறுகிரிய பகுதியில் பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதலை நடத்திவிட்டு சந்தேக நபரொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் சென்ற போது சந்தேக நபர் அவர்களை நோக்கி கைக்குண்டொன்றை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதன்போது அவரை நோக்கி பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய போதும் அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




