ஒருமித்த இலங்கையாக சகலரும் ஒற்றுமையாக வாழக் கூடிய அரசியலமைப்பை உருவாக்க சகலரும் ஒன்றிணைவோம் : சம்பந்தன்
ஒருமித்த இலங்கையாக சகலரும் ஒற்றுமையாக வாழும் அரசியலமைப்பை உருவாக்க சகல இனத்தவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் யாழ் துறையப்பா விளையாட்டு மைதனத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிகழ்வுகள் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கம் , ஒற்றுமை ஏற்பட வேண்டும். நாடு சுதந்திரமடையும் போது பெரும்பான்மையினத்தவர்களே சுதந்திரமடைந்தனர். சிறுபான்மையினர் சுதந்திரமடையவில்லை. ஒருமித்து அரசியல் சாசனம் அமைக்கப்படாமையே காரணம். தனிப்பட்ட கட்சிகளினால் ஏனைய கட்சிகளின் ஆதரவையும் , எல்லா இனங்களின் ஆதரவையும் பெறாதே அது அமைக்கப்பட்டது. இப்போது நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளோம். இந்த அரசியல் சாசனம் சமரசத்தின் அடிப்படையில் நாட்டில் எந்த இனத்தவராக இருந்தாலும் வாழ உரித்துடையவர் என்ற ரீதியில் இறைமை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பு உருவாக வேண்டும். இதனை மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். நாட்டை பிளவு படுத்தாது ஒருமித்து சமத்துவமாக வாழக் கூடிய அரசியலமைப்பை உருவாக்குவோம். இதற்கு சகல இனத்தவர்களும் ஒத்துழைக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார் -(3)




