உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும் , நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் – ஜனாதிபதி
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வில் நேற்று மாலை பங்குபற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும் , நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.
சமாதானம், சகோதரத்துவம், மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி மனங்களை சுகப்படுத்தும் உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு பாடுபடுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மைதானமென்பது, இன, மத, சாதி, மாகாண பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணையக்கூடிய இடமாகுமென இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் ஒழுக்கமற்ற சமூகத்தை ஒழுக்கமான சமூகமாக மாற்றும் விளையாட்டு மைதானம், தனிநபா;களிடம் ஒழுக்கத்தையும், பண்பையும் உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று எமது நாட்டுக்கும;, முழு உலகுக்கும் ஒழுக்க விழுமியங்கள் கட்டாயமான தேவையாக உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், ஒழுக்க விழுமியங்கள் இல்லாத்தால் உலகில் யுத்தம் நடைபெறுவதாகவும் யுத்தம் இல்லாதொழிந்து சமாதானம் உருவாக வேண்டுமென்றால் முழு உலகிலும் ஒழுக்கநெறி பின்பற்றப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்
நற்பண்பும், ஒழுக்கமும் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டுத்துறைக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தற்போiதய அரசு பாடுபடுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், முழு நாட்டிலும் ஒரேவகையான அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடியவாறு நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமுள்ள பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகைளை உயாத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
அதற்குத் தேவையான உயர் தரமுடைய விளையாட்டரங்குகள், நவீன தொழிநுட்பங்கள் உட்பட ஏனைய வசதிகளையும் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேசிய விளையாட்டு விழாவுக்காக நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 800 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் திறமைகளைக் வெளிக்காட்டியோருக்கு வெற்றிக்கேடயங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண முதலமைச்சா சீ.வீ. விக்னேஸ்வரன், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, எதpர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், விளையாட்டுத்துறை அமைச்சா தயாசிறி ஜயசேகர, இராஜாங்க அமைச்சா விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரணவபவன், அங்கஜன் ராமநாதன், உள்ளிட்ட பாராளுமன்ற உறுபபினர்களும் மாகாணங்களின் விளையாட்டுத்துறை அமைச்சாகள், வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், வீர வீராங்கனைகள் உட்பட பெருவளவாNனா நிறைவு நிகழ்வில் பங்குபற்றினாகள். -(3)




