செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்யுமாறு ரணில் நியுசிலாந்து வர்த்தக பிரதிநிதிகளிடம் கோரிக்கை

நியுசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கனை கண்டறிவதற்காகவே நியுசிலாந்துகான விஜயத்தை மேற்கொண்டதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இலங்கை மற்றும் நியுசிலாந்து வர்த்தக சமூகத்தினருக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்து மா சமுத்திரத்தில் நிதி மத்திய நிலையமாக வளர்ச்சியடைந்துவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறும் பிரதமர் இலங்கை மற்றும் நியுசிலாந்து வர்த்தக சமூகத்தினருக்கு இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்
ஒக்லாண்ட் நகரில் தொழில்மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இலங்கை நியுசிலாந்து வர்த்தக பேரவையின் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உரையாற்றுகையில் பிரதமர் இந்த வியங்களை குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம், கடற்றொழில், கால்நடை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் நியுசிலாந்து புதிய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்கும் முறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தெளிவுபடுத்தியதுடன் இரு நாடுகளுக்குயிடையில் அமைக்கப்பட உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூலம் இந்த வேலைத்திட்டம் மேலும் வலுவடையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். -(3)