செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை செய்வதற்கு ”சிங்களே ஜாதிக பெரமுண” (சிங்கள தேசிய முன்னணி) தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அகுலுஹல்லே சிறி ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதை விட அவர் போன்று மற்றையவர்களும் செயற்படாதிருக்கும் வகையில் இலங்கை சட்டத்தின்படி அவருக்கு எதிராக நடவடிக்கையெடுத்து தண்டனை வழங்குமாறு கோரியே இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக அந்த தேரர் தெரிவித்துள்ளார். -(3)