சூர்யா படத்தில் நான் நடிக்க கமிட் ஆகவில்லை
நானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
முதலில் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இச்செய்தியை மறுக்க, ஹன்சிகா நடிக்கிறார் என்று செய்திகள் வர ஆரம்பித்தன.
இந்நிலையில் ஹன்சிகாவும் இதனை மறுத்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினர் யாரும் தன்னிடம் இந்த படத்தில் நடிக்குமாறு அணுகவில்லை என்றும் இது முழுக்க முழுக்க தவறான செய்தி. எனவே இந்த வதந்தியை இத்துடன் முடித்து கொள்ளுமாறும் ஹன்சிகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
N5




