சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி
கற்றது தமிழ் , அங்காடி தெரு போன்ற படங்களின் மூலம் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் அஞ்சலி. இவரின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது இவரது சித்தி பாரதி தேவி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஞ்சலிக்கும் அவரது சித்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது குடும்பச்சண்டையாக மாறியது. இதனால் அஞ்சலி சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றார். அதன் பிறகு இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வரும் அஞ்சலி சமீபத்தில் சித்தியின் வீட்டுக்கு சென்று சமாதானம் அடைந்துள்ளார், அவரது சித்தியம் பழசை மனதில் வைத்துக்கொள்ளாமல் அஞ்சலியிடம் அன்பாக பேசியதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
N5




