செய்திகள்

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்றும் தோல்வி

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்றும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.
இன்று பிற்பகல் கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் அங்கு முதலாளிமார் சம்மேளனத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வந்த போதும் வேலை நாட்களை வாரத்திற்கு 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 6 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென அதில் கலந்துக்கொண்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்த போதும் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு இணங்காத காரணத்தினால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. -(3)