வெட்டுப் புள்ளிக்கு கீழ் பெற்றாலும் அவர்கள் திறமையானவர்களே
நேற்று வெளியான 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேற்றின் மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகள் இன்று வெளியிடப்படவுள்ளன.
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை பிள்ளைகளின் திறமைகளை மதிப்பிட முடியாது எனவும் இதனால் பரீட்சையில் அவர்கள் பெற்ற புள்ளிகளை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை உளவியல் தாக்கங்களை ஏற்படுத்த வேண்டாமென கல்விமான்கள் பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில பெற்றோர்களை பரீட்சையில் அவர்கள் பெற்ற புள்ளிகளை அடிப்படையாக கொண்டு அவர்களை உளவியல் ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் இவ்வாறு செய்வதால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பரீட்சையில் எத்தனை புள்ளிகள் எடுத்தாலும் குறிப்பிட்டளவு வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் குறிப்பிட்டளவிலான பிள்ளைகளுக்கு மாத்திரமே புலமை பரிசில்களை வழங்க முடியும் என்ற காரணத்தினால் மற்றையவர்களை திறமையற்றவர்கள் என கூறமுடியாது எனவும் இதனால் பெற்றோர் சிந்தித்து நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் கல்விமான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -(3)




