செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய மட்டத்தில் வவுனியா மாணவன் அபிசிகன் முதலிடம் (படங்கள்)

ஓகஸ்ட் மாதம் நடைபெற்று தற்போது வெளியாகியள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் முதலாமிடம் பெற்றுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுவரும் இம் மாணவன் 195 புள்ளிகளைப் பேற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தனது வெற்றி குறித்து மாணவன் தெரிவிக்கையில்,

நான் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமையை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இரக்கிறது. நான் இந்த நிலையை அடைய எனக்கு வழிகாட்டிய எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர், அம்மம்மா ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எல்லாவற்றக்கும் மேலாக கடவுளுக்கும் நன்றி கூறுகின்றேன். நான் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு கஸ்ரப்பட்டு படித்ததினாலேயே இந்த நிலையை அடைந்தேன். எதிர்காலத்தில் பொறியிலாளராக வந்து இந்த சமூகத்திற்கு பணியாற்றுவதே எனது இலக்கு எனத் தெரிவித்தார்.

இது குறித்து வகுப்பாசிரியர் திருமதி ரகு விஜய வதனி குறிப்பிடுகையில்,

குறித்த மாணவனுக்கு நான் மூன்றாம் ஆண்டில் இருந்தே கற்பித்தேன். அப்பொழுதே இந்த மாணவின் திறமையை என்னால் இனங்கண்டு கொள்ள முடிந்தது. எம்மால் கூறப்படுகின்ற அறிவுரைகளை பின்பற்றி குழப்பம் இன்றி செயற்படக் கூடிய மாணவன். எல்லா மாணவர்களும் கெட்டிகாரர்கள் தான். ஆனால் அவர்களிடம் சிலவேளைகளில் ஏற்படும் மனரீதியான குழப்பங்கள் பரீட்சையில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மாணவன் எதையும் மனதில் போட்டு குழப்பாமல் அமைதியாக இருந்து சொல்வதைக் கடைப்பிடித்தமையால் கிடைத்த வெற்றியே இது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த மாணவனுக்கு எமது பாராட்டுக்கள் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, மாணவனின் தந்தை கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோரும் குறித்த பாடசாலையிலேயே ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

P8P1P2P4P5P7

N5