செய்திகள்

ஊழல் மோசடி விசாரணை தொடர்பாக அரசாங்கத்திற்கு வந்த குழப்பம்

கோடிக் கணக்கான ரூபா நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்ததாது சில்லறை கணக்கான நிதி மோடிகள் தொடர்பாக மட்டுமே தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இது எவ்வாறு நடக்கின்றதென அரசாங்கத்திற்கே புரிந்துக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளார் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பில்லியன் , கோடியெ ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. ஆனால் சம்பந்தப்பட்ட விசாரணை பிரிவுகளோ. பெட் மற்றும் கரம்போட் விநியோகித்தல் உள்ளிட்ட சில்லறைத்தனமாக விடயங்கள் தொடர்பாகவே விசாரணைகள் நடக்கின்றன. இதனை எமக்கே புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஏன் இப்படி நடக்கின்றதென நாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)