செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் நிலுவை கிடைப்பதில் சந்தேகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டாலும் அவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபா வரை அதிகரிக்க தொழிற் சங்கங்களும் மற்றும் முதலாளிமார் சம்மேளமும் இணக்கம் தெரிவித்துள்ளன. இதன்படி விரைவில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த 20 மாதத்திற்கான நிலுவை சம்பளம் வழங்கப்படுமா என கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அது சிக்கலான ஒன்றாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார். -(3)