செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இன்று கொழும்பில் அணி திரளும் மலையக பற்றாளர்கள்

தமது உரிமைகளுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கொழும்பில் தொழில் புரியும் அவர்களின் பிள்ளைகள் மற்றும் மலையக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இன்று முற்பகல் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இன்று காலை 11 மணியளவில் புறக்கோட்டை ஐந்துலாம்பு சந்தியில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
எந்தவித அரசியல் கட்சியல் கலப்புமின்றி மலையக சமூகத்தின் மீது பற்றுள்ள சகலரையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -(3)