செய்திகள்

வடக்கில் காணிகள் இராணுவத்திற்கே சொந்தம் : வீரக்குமார திஸாநாயக்க

வடக்கின் காணி உரிமை இராணுவத்துக்கே உரித்தானது எனவும் அங்கிருந்து அவர்களையோ அல்லது இராணுவ முகாம்களையோ அகற்ற முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காணிகளை கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினரே நிலத்தை மீட்டனர். இதற்கிணங்க நியாயப்படி பார்த்தால் அந்த நிலம் அவர்களுக்கே சொந்தம். இராணுவ முகாம்கள் வடக்கில் மட்டுமல்ல வேறு இடங்களிலும் இருக்கின்றன. இராணுவம் தொடர்பாக பிரச்சினையுள்ளவர்களே அவர்களை வடக்கிலிருந்து அகற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3)