730ரூபா சம்பள அதிகரிப்பு 15ஆம் திகதி முதல் அமுல் : 14ற்கு முன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பள அதகரிப்பை வழங்க முதலாளிமார் சம்மேளனமும் மற்றும் தொழிற்சங்கங்களும் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் அந்த சம்பள அதிகரிப்பை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல் படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருடத்திற்கு 250 வேலை நாட்கள் என்ற அடிப்படையிலேயே இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக நேற்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க , முதலாளிமார் சம்மேளனத்தினர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)




