செய்திகள்

‘2018 கொமன் வெல்த் கேம்’ கணக்கில் 246 ரூபாவே மிகுதி : 680 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன?

2018பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை இலங்கையின் அம்பாந்தோட்டை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாக்களிப்பின் போது செலவிடுவதற்காக கடந்த மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் அரச மற்றும் நன்கொடை நிதிகள் மூலம் 680 மில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தற்போது 246 ரூபாவே மிகுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
”கொமன் வெல்த் கேம்” என்ற பெயரில் இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்டிருந்த அந்த கணக்கை நடத்திச் செல்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் இணை தலைலவர்களாக அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் செயற்பட்டுள்ளனர். அத்துடன் அந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கணக்கு நிதி திட்டமிடல் முறையும் இன்றி செலவு செய்யப்பட்டுள்ளதாக நிதி மோசடிகள் தொடர்பான விசாரணை பிரிவு மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் விளையாட்டுப் போட்டியை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இறுதியில் அந்த வாய்ப்பு அவுஸ்திரெலியாவுக்கே கிடைத்தது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)