செய்திகள்

புலமைச் சொத்துக்களை பாதுகாக்க புதிய சட்டம்

அறிவுசார்ந்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படுத்தவுள்ளது.
இது தொடர்பில் சட்டமூலம் ஒன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்படும் இசைத் தயாரிப்பு, இசைக்கப்படும் பாட்டு, அல்லது கலை தொடர்பான விடயங்கள் ஆகியவற்றை அறிவுசார்ந்த சொத்துக்களாக பதிவு செய்ய முடியும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை வேறு ஒருவர் பயன்படுத்தினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இநத சட்டத்தின் கீழ் தயாரிப்பாளர்களால் முடியும். -(3)