செய்திகள்
வவுனியா அலகல்ல காட்டுப்பகுதியில் இரு குண்டுகள் மீட்பு
வவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து இன்று காலை இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை (8.10) அலகல்ல அலுக்கம காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கபட்டுள்ளது. இந் நிலையில் இரவு வேளை பாரிய குண்டுச்சத்தம் கேட்ட நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது ஆர்பிஜி குண்டு ஒன்றினை கண்டு பொலிஸாருக்கு தகவலை வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தேடுதல் நடத்தியதில் மேலும் ஒரு குண்டும் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்படி குண்டொன்றை வெடிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
N5










