செய்திகள்
அகுணுபெலஸ்ஸவில் இருவர் வெட்டிக்கொலை
அகுணுபெலஸ்ஸ முரவெட்டிஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக 60 வயது தந்தையும் 30 வயது மகனுமே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இவர்களின் வீட்டுக்கு வந்த குழுவொன்று இவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். – (3)




