அரசாங்கத்திலிருந்து விலகி தனித்து செயற்பட தயார் : மனோ கணேசன்
அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாகவோ அல்லது ஜே.வி.பியுடன் இணைந்தோ செயற்பட தயாராக இருப்பதாக சகவாழ்வு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
”நெத்” சிங்கள வானொலியின் நிகழ்சியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போதிய அதிகாரங்கள் இன்றியே அமைச்சில் இருக்கின்றேன். என்னுடன் கலந்துரையாடாது எனது அதிகாரங்களை எடுத்துக்கொள்கின்றனர். எனக்கு போதிய அதிகாரங்கள் வேண்டும். வரவு செலவு நேரத்தில் போதிய நிதியும் எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படுவதில்லை. ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சரவையில் நடந்தவைக் கூட இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் நடப்பதில்லை. எனக்கு தொடர்ந்தும் பொம்மை அமைச்சர் போன்று இருக்க முடியாது வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகவோ அல்லது ஜே.வி.பியுடன் இணைந்தோ செயற்பட தயார். இது தொடர்பாக அரசாங்க தலைவர்களுக்கு அறிவித்துள்ளேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




