செய்திகள்

நாட்டின் சுதந்திரம் , இறையாண்மையை பாதுகாக்கவே நான் ஜனாதிபதியானேன் : மைத்திரி

தான் நாட்டை துண்டாடுவதற்கோ , பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதற்கோ  அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ ஜனாதிபதியாகவில்லையெனவும்  நாட்டின் சுதந்திரம் , இறையாண்மையை பாதுகாத்து சுதந்திர ஜனநாயக நாட்டை உருவாக்கவே இந்த பதவிக்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின்  அரசியல் வாழ்வின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தன்னால் நிறைவேற்றவேண்டி கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுதல், அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் இதன்படி மக்கள் பணிக்காக மஹிந்த அமரவீர முன்னெடுத்த அர்ப்பணிப்பை பாராட்டியதோடு அவரது எதிர்காலப் பயணத்திற்கு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் சிறந்த நோக்குத் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் தனது காலடியிலுள்ள பிரச்சனைகளை இனம்கண்டு நடவடிக்கைகளை எடுப்பது அரசியல்வாதியின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி  மக்கள் மத்தியில் சென்று அவர்களது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை ஆராய்ந்துபார்த்து அவற்றுக்கு தீர்வு வழங்குதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.  -(3)