செய்திகள்

மைத்திரி செல்ல தவறிய மட்டு விகாரைக்கு மகிந்த விஜயம்: புதிய கட்டடத்துக்கு அடிக்கல்லும் நாட்டினார்

மட்டக்களப்புக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள மங்களராமய விகாரைக்கும் சென்று விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், புதிய கட்டம் ஒன்றுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

கடந்த ஜூலையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விகாரைக்கு அழைக்கப்பட்டிருந்த பொதிலும், அங்கு செல்வதைத் தவிர்த்துக்கொண்டார். இதற்காக விகாராதிபதி ஜனாதிபதி மீது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால விஜயம் செய்யத் தவறிய விகாரைக்குச் சென்றதன் மூலம் அவ்விகாராதிபதியின் ஆதரவை மகிந்த ராஜபக்‌ஷ பெற்றிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில் தோவ்வியடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மகிந்த ராஜபக்‌ஷ விஜயம் செய்திருப்பது இதுவே முதல்முறையாகும். :06