செய்திகள்

பெண்கல்வி எனக்கு நெருக்கமான விடயம்- அமெரிக்க முதற்பெண்மணி

சிஎன்என்
என்னை பொறுத்தவரை கல்வி என்பது ஓரு கொள்கை சார்ந்தவிடயமல்ல மாறாக அதனை விட நெருக்கமான விடயம்.

எனது பெற்றோர்களோ அல்லது எனது அயலில் உள்ளவர்களோ கல்லூரிக்கு சென்றவர்கள் அல்ல,எனினும் எனது கடினமுயற்சி மற்றும் பெருமளவு நிதியுதவி காரணமாக உலகின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் கல்வி கற்ற கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த கல்வி எனக்கு பல வாய்ப்புகளை அளித்ததுடன் எனது அபிலாசைகளை முன்னெடுப்பதற்கான தன்னம்பிக்கைiயும் உலகில் எனக்கான ஓரு குரலையும் வழங்கியது.

என்னை பொறுத்தவரை கல்வி என்பது ஓரு சக்தி. ஓரு பலம் .

சிலவருடங்களிற்கு முன்னர் பாடசாலைக்கு செல்ல விரும்பியதற்காக சுடப்பட்ட மலாலாவை நான் சந்தித்தவேளை இந்த விடயம் என்னை இன்னமும் தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. அவரது குரலை மௌனமாக்கவும், அவரது அபிலாசைகளை களவாடவும் அவரது பலத்தை பறிக்கவும் பயங்கரவாதிகள் முயன்றதனை நான் கண்டேன்.

இதன் காரணமாகவே நான் முதற்பெண்மணி என்ற வகையில் உலகபெண்கள் கல்விக்காக பாடுபட தீர்மானித்தேன், உலகின் மூலையில் மலாலா போன்று பாடசாலைக்கு செல்லாத மில்லியன் கணக்காண சிறுமிகள் உள்ளனர். அவர்கள் மிகுந்த புத்திசாலிகள் கடினமாகபாடுபடக்கூடியவர்கள்,கற்றலிற்கான பேரவாவை கொண்டவர்கள். கடந்த வருடம் நாங்கள் ஆரம்பித்த யுவதிகளை கல்விகற்க விடுவோம் என்ற திட்டத்தின் நோக்கம் இதுவே. இது அவர்களிற்கான கல்வியை வழங்குவதற்கான சர்வதேசமுயற்சி.