செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே விசேட பாதுகாப்பு வழங்கப்படும் : அரசாங்கம்

வடக்கு முதலமைச்சருக்கு உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கமாகவிருதால் அவருக்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் வழங்குமெனவும் ஆனால் அது அரசியல் நோக்கங்களுக்காக பாதுகாப்பு கோரப்படுமாகவிருதால் அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படாது என பதில் அமைச்சரவை பேச்சாளரான பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் விக்னேஸ்வரனின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாகவிருந்தால் பாதுகாப்பு அமைச்சு அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கையெடுக்கும் ஆனால் அது அரசியல் நோக்கத்திற்கானதாக இருக்குமாகவிருந்தால் அந்த பாதுகாப்பை வழங்க முடியாது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)