செய்திகள்

ஜே.வி.பி ஜனாதிபதி மைத்திரியை சாடுகிறது

சீ.ஐ.டி , எப்.சீ.ஐ.டி மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு ஜே.வி.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குற்றப் புலனாய்வு திணைக்களம் , நிதி மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியன அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவதாக சந்தேகம் வெளியிடும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். அவரின் இந்த கருத்தை கடுமையானதாகவே நாம் கருதுகின்றோம்.
ஜனாதிபதியின் இந்த கருத்து அவருக்கு பொறுத்தமானதல்ல. அவர் நாட்டினதும் மற்றும் அரசாங்கத்தினதும் தலைவராக இருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறு பொறுத்தமற்றது என்கின்றோம். இந்த நிறுவனங்கள் யாருடையதேனும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்றதென்றால் அது யார் என்பது தொடர்பாக ஜனாதிபதி நாட்டுக்கு கூற வேண்டும். தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ள பாரியளவிலான குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்கள் சிலர் தொடர்பாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படாது இருக்கின்றது. என்பது நாட்டுக்கே தெரியும். இதன்படி அவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவா நடக்கின்றது என்பதனை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)