செய்திகள்

தோட்ட தொழிலாளர்கள் சந்தா நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தொழிற்சங்கங்களும் மற்றும் முதலாளிமார் சம்மேளனமும் 730 ரூபா சம்பளத்தையே வழங்க இணங்கியுள்ளதையடுத்து தோட்டங்கள் பலவற்றில் தொழிலாளர்கள் தமது தொழிற்சங்கங்களுக்கான சந்தவை நிறுத்தும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் பல தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் தொழிற் சங்கங்களுக்கான சந்தாவை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவ்வாறாக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற் சங்கங்கள் மற்றும் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களுக்கு சந்தா வழங்குவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமக்காக தொழிற் சங்கங்கள் இருக்கின்றதென்றே நாங்கள் சந்தாவை வழங்குகின்றோம். ஆனால் அந்த சந்தாவில் தமது வாழ்க்கையை நடத்திக்கொண்டு அதிலும் அரசியல் செய்து எங்களுக்காக எதனையும் செய்யாது இருப்பார்களாக இருந்தால் எதற்காக நாங்கள் அவர்களுக்கு சந்தாவை வழங்க வேண்டும். இதனால் சம்பளத்திற்காக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை விட சந்தாவை நிறுத்தினாலே அவர்கள் திருந்துவார்கள் என கோரியே அவர்கள் சந்தா நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும் நாளைய தினம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)