செய்திகள்

ராமர் உருவ பொம்மைகளை எரித்தவர்கள் கைது!

சென்னை ராயப்பேட்டையில் ராமர், சீதை உருவ பொம்மைகளை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வட இந்தியாவில் தசரா கொண்டாட்டத்தின்போது ராம லீலா எனும் பெயரில் திராவிட மன்னர் ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது திராவிடர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது ராமர், சீதை மற்றும் லட்சுமணன் உருவ பொம்மைகளை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலமுருகன், ஜெயகுமார், கணேஷ், தீபன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

N5